அரும்புகள்

காகமும் நரியும் ..பாட்டி சுட்ட வடையும்

Posted on: ஜூன் 27, 2007

ஒரு காகம் பறந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியிலே ஒரு பாட்டி வடை
சுட்டுக் கொண்டிருப்பதை பார்த்தது.

அந்த மரத்துக் கிளை மேலே பறந்து போய் உட்கார்ந்து கொண்டு பாட்டியைப் பார்த்து,
‘ஹாய் பறவை முனியம்மா பாட்டி ஹௌ ஆர் யூ ‘ என்று கேட்டது.

பாட்டி ஆச்சரியத்தோடு,’ஹாய் காக்கா ஐ யாம் ஃபைன் ஆமாம் என் பேரு உனக்கு எப்படித் தெரிந்தது’என்று கேட்டாள்.

‘நான் தான் வாராவாரம் சன் டிவியில நீ சமைக்கிறத பார்த்திருக்கேனே’

‘அது சரி இப்ப எதுக்கு இங்க வந்தே வடை திருடத்தானே’

‘நோ நோ டோன்ட் மிஸ்டேக் மீ ஐ யாம் நாட் அ தீஃப் .வடை சுடும் வாசனையைப் பார்த்து வாங்கிச் சாப்பிட வந்தேன்’

‘சரி சரி இந்தா சாப்பிட்டுப் பாரு’என பாட்டி குடுக்க

காகம் கேட்டுது,’ஆமா இது பிரீ ஹீட் பண்ண எண்ணையில சுட்டதா?’

‘பிரீ ஹீட்டுன்ன்னா?இது ரிபைன்ட் ஆயில்லதான் சுட்டேன்’

‘பிரீ ஹீட்டுன்னா நெறய முறை வாணலியில் சூடுபடுத்தி உபயோகப் படுத்தனது.அதைத் திரும்பத் திரும்ப சுட வைக்கும் போது அதன் குணம் மாறி உடம்புக்கு கெடுதல் செய்யும்.வயிற்றுக் கோளாறு,அல்சர்,அஜீரணம் எல்லாம் வரும்.ஏன் தொடர்ந்து யூஸ் பண்ணா கேன்சர் கூட வரலாம்’

‘ஓ அப்படியா? இது சுத்தமான ஆயில்தான் சுட்டேன் .
இனி நான் அடிக்கடி சூடுபடுத்தியதை உபயோகிக்க மாட்டேன்.
தகவலுக்கு நன்றி.
இந்தா நீ இவ்ளோ நல்லவனா பொய் சொல்லாம திருடாம இருப்பதால் உனக்கு ஃபிரீயாவே ஒரு வடை தரேன்’என்று முனியம்மா பாட்டி வடையைக் கொடுத்தாள்.

காகம் வடையுடன் இருப்பதைப் பார்த்த ஒரு நரி தந்திரமாக அதை அபகரிக்க எண்ணி,
‘ஹல்லோ மிஸ்டர் காகம் யூ ஆர் வெரி பியூட்டிஃபுல் அண்டு ய குட் சிங்கர் டூ.
ஃப்ளீஸ் எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்’ என்றது.

காகம் ,’ஹலோ மிஸ்டர் நரி இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட பலிக்காது.உனக்கு வடை வேணும்னா அங்க கண்மணி ஆன்ட்டி ஒரு பஸுல் [புதிர்] போட்டிருக்காங்க அதுக்கு சரியான பதில் சொன்னா நானே இதை உனக்குத் தரேன் என்றது.

காகம் சொன்னதைக் கேட்ட நரி இதை ஏமாத்த முடியாது எனப் புரிந்து கொண்டு ஓடி விட்டது.

ஹாய் குட்டீஸ் கதை எப்படி ஓகே வா?புடிச்சிருக்கா?

சீக்கிரம் உங்க வீட்டுப் பெரியவங்க உதவியோட புதிரைக் கண்டுபிடித்து வின்னர் ஆகுங்க குட்டீஸ்

பை
கண்மணி ஆன்ட்டீ

Advertisements

11 பதில்கள் to "காகமும் நரியும் ..பாட்டி சுட்ட வடையும்"

தகவல்களாம் குட்டீஸ்களையும் மீறி ரொம்ப நல்லா இருக்கு..;)! ‘பெருசு’க கிட்ட சொல்லி ஒரு பயனும் இல்ல… “குட்டீஸ்”கள்தான் பெஸ்ட்னு நினைட்டிட்டீங்களா..?அதுவும் சரிதான்!

அடடா கண்மணி.. அசத்திட்டிங்க..

அக்கா,காக்கா-வடை கதையா? மறுவெளியீடு செய்து இருக்கீங்க. இது என்னோட கதை. காப்பி ரைட் பிரச்சனை வந்துட போகுது.

இது என்னோட கதைங்க குட்டிபிசாசு. எங்கிட்ட இருந்து திருடிட்டு உங்களோடதுன்னு சொல்றீங்களா

நன்றி தென்றல் ,டெல்பின்,குட்டி பிசாசு ,சின்ன அம்மினி ஆனா குட்டீஸ் எதுவும் இன்னும் படிச்சுதான்னு தெரியலை.ஸ்கூல் டைம் போக அவர்களுக்கு இதெற்கெல்லாம் நேரம் கிடைப்பதும் கடினம்தான்.பார்ப்போம்

உங்க பதிவை ‘தேசி பண்டிட்’லே லிங்க் செஞ்சிருக்கேன்.http://www.desipundit.com/category/tamil/வடையை விட முடியுதா? :-))))

thanks thulasi akkaa.get two more vadais as complement;(

நல்ல தளம், முயற்சி. வாழ்த்துக்கள்!ஆனால்…தமிழ் கதைக்குதவாது என்பதை நம்பிவிட்டீர்களா? :))

@சுந்தர வடிவேல்என்ன சொல்றீங்கன்னு புரியலை.ஆனா பழைய கதைகளில் கொஞ்சம் புது மெருகேத்தி குடுக்கிறேன்.கதை மட்டுமல்ல குட்டீஸ் விஷயம் எல்லாம் வரும்.

ஆங்கிலக் கலப்பைச் சொன்னேன்.

இல்லை சுந்தர வடிவேல்.இப்போதுள்ள பிள்ளைகளுக்கு சுத்த தமிழ் புரியாது.ஒன்னு ப்யூர் ஆங்கிலம் இல்லை தமிங்கிலம்தான் தெரியும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements

%d bloggers like this: