அரும்புகள்

பேசும் மாய விளக்கு

Posted on: ஜூலை 10, 2007

ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தாங்க.

அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.

ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது.

உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.

அவனை எப்படியும் தப்பிக்க விடாமல் புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நெனச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.

அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு ,’மாய விளக்கே என் மீது கோபமா?நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை’ என்றாள்.

இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம்.பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி,’ கோபமில்லையா?அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள்.பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது.அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.”

மீண்டும் விளக்கு காற்றில் அசைய ,’ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா’ என பாட்டி கேட்டாள்.

திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை.நமக்கு மட்டும் ஒன்னும் கேட்கலை.விளக்கு ஆடுவது தெரியுது.ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.

”மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன்” என்றபடி பாட்டி ‘ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

பாட்டியிடம் உங்களுக்கு துணைக்கு ஆள் வேண்டுமா என்று கேட்டபோது,’வேண்டாம் எனக்குத்தான் மாய விளக்குத் துணை இருக்கே ‘என்று சிரித்தாள்.

பாட்டியின் சமோயோசித புத்தியைப் பாராட்டிச் சென்றனர்.

நீதி:ஆபத்துக் காலத்தில் சிந்தித்து செயல் பட்டால் அதிலிருந்து நல்லபடியாக நம்மைக் காத்துக் கொள்ளலாம்

9 பதில்கள் to "பேசும் மாய விளக்கு"

நல்ல கதை!

நல்ல தமிழில் கதையை எழுதிவிட்டு, “ஹெல்ப்!ஹெல்ப்” என்று பாட்டி கூறுவதற்கு பதில். “உதவுங்கள்!உதவுங்கள்” என்று கூறியிருக்கலாம்.ஒருவேளை கண்மணி அக்கா(பாட்டி) தான் சொல்லுராங்களோ!!

ஐ, எங்கட பாட்டியும் இப்படித்தான், சரியான திறம்! நன்றி கண்மணி அக்கா, என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்கொண்டதுக்கு!

அக்கா நல்ல கதை , நாங்க உங்க வீட்டுக்கு வரும் பொழுது இப்படி நீங்க சவுண்ட் உடாம இருந்தா நல்லது.

நன்றி சிபி,குசும்பன்,குட்டிபிசாசுபிசாசு இது ஒரு ஆங்கிலக் கதையின் தமிழாக்கம்.மறந்து போய ஹெல்ப் என்ற வார்த்தைப் பிரயோகம்.

வாங்க மழலை.இப்பெல்லாம் உங்க பதிவுகளைக் காணோம். படிப்பு அதிகமோ ?குட்டீஸ் ஜங்ஷனில் சேர விரும்பினால் அழைப்பு விடுக்கிறேன்.சரியா?

Very nice story,My 5 years old daughter,she needs story everyday before bedtime.thanks to arumbugal.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: