அரும்புகள்

குட்டீஸ்:பத்தோடு பதினொன்றா நீங்கள்?

Posted on: மார்ச் 1, 2008

குட்டீஸ்!

குட்டீஸ் முன்பு சுலபமாய் 9 ஆல் பெருக்கச் சொல்லிக் கொடுத்தேன்.

இப்போது இன்னும் சுலபமாய் 11 ஆல் பெருக்க சொல்லித்தரப் போகிறேன்.

ஒற்றை இலக்க எண்களைச் சுலபமாய் 11ஆல் பெருக்க முடியும்.

இரட்டை இலக்க எண்களை எப்படி 11 ஆல் பெருக்குவது?:

உதாரணமாக 12×11=132 இதில் அந்த இரண்டு எண்களையும்

கூட்டிக் கொள்ளவும் 1+2=3 இந்த கூட்டுத்தொகையை அப்படியே

இரண்டுக்கும் நடுவில் சேர்க்க வேண்டியதுதான். 1 3 2 சரியா?

இன்னொரு உதாரணம்: 56×11=616 [5+6=11] இதை இரண்டுக்கும் நடுவில் எழுதினால்
5+1 1 6 =6 1 6 [கூட்டுத்தொகை இரண்டு இலக்கத்தில் வரும்போது பதின்ம எண்ணை [செகண்ட் டிஜிட்] முதல் எண்ணுடன் கூட்டவும்.

இரண்டுக்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட எண்களை 11 ஆல் பெருக்குதல்:

உதாராணமாக 34781×11 = 382591

வலது புறத்திலிருந்து ஆரம்பித்து முதல் இலக்க எண்ணை அப்படியே எழுதவும்.1+0=1
அடுத்து முன்னால் உள்ள எண்ணுடன் அடுத்த எண்ணைக் கூட்டி எழுதியபடி செல்லவும்.

1+0=1
1+8=9
8++7=15
7+4=11
4+3=7
3+0=3 3 7 11 15 9 1= 382591 [பதின்ம எண்ணை அடுத்த எண்ணுடன் கூட்டவும்]

இன்னொரு உதாரணம் 7946732×11= 87414052
2+0=2
3+2=5
7+3=10
6+7=13
4+6=10
9+4=13
7+9=16
7+0=7 2 5 10 13 10 13 16 7 =87414052

உங்க நண்பர்களிடம் எத்தனை பெரிய எண்களையும் நொடியில் 11 ஆல் பெருக்கிக் காட்டி அசத்துங்க.இனி நீங்க பத்தோடு பதினொன்று இல்லை.சாமர்த்தியசாலின்னு நிரூபிங்க.
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

Advertisements

10 பதில்கள் to "குட்டீஸ்:பத்தோடு பதினொன்றா நீங்கள்?"

அரும்புகள் பதிவு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.

ஒரு ஊருல ஒரு கால் ஒடிந்த சிட்டுக்குருவி இருந்ததாம். அது கால் ஒடிந்த குருவிங்கிறதால மற்ற குருவிகள் அதை தங்களோட சேர்த்துக்கலையாம். அதனால அந்தகுருவி கவலையோட இருந்தப்போ வானத்துல நெறைய குருவிகள் பறந்து போய்கிட்டு இருந்ததாம். ஏக்கத்தோட அந்த குருவிகளை பார்த்து என்னையும் உங்களோட சேர்த்துக்குங்க அப்படின்னு கேட்டுச்சாம். எல்லா குருவிகளும் வேண்டாம் வேண்டாம் அப்படின்னு சொன்னுச்சாம். அப்ப அந்த கூட்டத்தில் இருந்த ஒரு வயதான குருவி ஊனமா இருக்கிறதால யாரையும் உதாசீனம் செய்யக்கூடாது. அவர்களிடத்தும் நல்ல திறமைகள் இருக்குன்னு சொன்ன அந்த வயதான குருவி, நான் ஒரு புதிர் போடுறேன் அதுக்கு நீ சரியான பதிலை சொல்லிட்டா உன்னையும் எங்களோடு சேர்த்துக்கொள்கிறோம் அப்படின்னு சொல்லுச்சாம். சரின்னு இந்த கால் ஊனமுற்ற சிட்டுக்குருவி ஒத்துகிச்சாம்.வயதான குருவி புதிர சொல்ல ஆரம்பிச்சது. எங்களோடு எங்களையும் எங்களில் பாதியையும் பாதியில் பாதியையும் உன்னையும் சேர்த்தால் 100 வரும். அப்படின்னா நாங்க எத்தனை பேருன்னு எண்ணி பார்க்காம சொல்லுன்னு சொல்லுச்சாம்.அந்த ஊனமுற்ற குருவியும் பட்டென்று பதில சொல்லிடுச்சாம்.இந்த புதிர் நல்லா இருந்தா பயன்படுத்திக்குங்க.

விடை என்னன்னு குட்டீஸ் மட்டும் சொல்லுங்க?

நிஜமா நல்லவன் அங்கிள் நான் கண்டு புடிச்சிட்டேன்.சொல்லட்டுமா?அது மு…று தானே?

அய்யோ விடை சொல்லலேன்னா மண்டை வெடிச்சிடும் – இரட்டை இலக்க எண் – முதல் இலக்கத்தைப் போல் இரு மடங்கு இரண்டாம் இலக்கம். 1, 2, 3, 4, 6, 9 ஆகியவற்றால் வகுபடும்.

விடை சரி தான். ஆனா இது உங்களுக்கே நல்லா இருக்கா? என்னைய போய் அங்கிள் அப்படின்னு சொல்லிடீங்களே அக்கா?

ஒரு ஊருல அண்ணன் தம்பிங்க மூணு பேரு இருந்தாங்களாம். அவங்க தினமும் தோட்ட வேலைக்கு சேர்ந்துதான் போவாங்களாம். ஒரு நாள் தோட்டத்தோட முதலாளி தென்னை மரத்திலிருந்த தேங்காய்களை எல்லாம் பறித்து போட சொன்னாராம். வேலை முடிஞ்ச பிறகு முதலாளி குறிப்பிட்ட அளவு தேங்காய்களை கூலியா கொடுத்தாராம். அதை மூணு பாகமா சரியா பிரிக்க முடியல. அதனால அவங்களுக்குள்ள சண்டை வந்து பஞ்சாயத்து தலைவரை பார்க்க போய்ட்டாங்களாம். வேலைக்கு போனவங்க வீடு திரும்பாததால முதல் அண்ணனோட மனைவி தன்னோட பையனை அழைச்சுகிட்டு தோட்டத்துக்கு வந்தாங்களாம். நடந்தத கேள்விப்பட்டு நேரா போய் தேங்காய்களை மூணு பாகமா பிரிச்சாங்கலாம். ஒரு தேங்காய் மிச்ச பட்டுதாம். அதை தன்னோட பையன் கிட்ட கொடுத்துட்டு மூணு பாகத்துல ஒரு பாகத்த எடுத்துகிட்டு மிச்ச இரண்டு பாகத்தையும் ஒண்ணா சேர்த்து வச்சுட்டு வீட்டு போய்ட்டாங்களாம். அடுத்து இரண்டாவது அண்ணனோட மனைவி தன்னோட பையனை அழைச்சுகிட்டு தோட்டத்துக்கு வந்தாங்களாம். நடந்தத கேள்விப்பட்டு நேரா போய் தேங்காய்களை மூணு பாகமா பிரிச்சாங்கலாம். ஒரு தேங்காய் மிச்ச பட்டுதாம். அதை தன்னோட பையன் கிட்ட கொடுத்துட்டு மூணு பாகத்துல ஒரு பாகத்த எடுத்துகிட்டு மிச்ச இரண்டு பாகத்தையும் ஒண்ணா சேர்த்து வச்சுட்டு வீட்டு போய்ட்டாங்களாம்.அப்புறம் கடைசி தம்பியோட மனைவி தன்னோட பையனை அழைச்சுகிட்டு தோட்டத்துக்கு வந்தாங்களாம். நடந்தத கேள்விப்பட்டு நேரா போய் தேங்காய்களை மூணு பாகமா பிரிச்சாங்கலாம். ஒரு தேங்காய் மிச்ச பட்டுதாம். அதை தன்னோட பையன் கிட்ட கொடுத்துட்டு மூணு பாகத்துல ஒரு பாகத்த எடுத்துகிட்டு மிச்ச இரண்டு பாகத்தையும் ஒண்ணா சேர்த்து வச்சுட்டு வீட்டுக்கு போய்ட்டாங்களாம். பஞ்சாயத்து தலைவரை பார்க்க முடியாததால அண்ணன் தம்பிங்க தோட்டத்துக்கு திரும்பி வந்தாங்களாம். வந்து பார்த்தா 6 தேங்காய் தான் இருந்துச்சாம். சரின்னு ஆளுக்கு 2 தேங்காய் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்களாம். குட்டீஸ் இப்ப மொத்தம் எத்தனை தேங்காய் கூலியா முதலாளி கொடுத்தாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.

நிஜமா நல்லவன் – நான் சொன்ன மொத விடை சரியா சொல்லலேயே – இருக்கட்டும்.இரண்டாவது விடை – இரண்டு இலக்க எண். 1, 5 ஆல் வகுபடும். முதல் இலக்கத்தைப் போல் 2.5 மடங்கு இரண்டாம் இலக்கம்.சரியா

சீனா சார் நீங்க சொன்ன இரண்டு விடையும் சரிதான். குட்டீஸ் விடை சொல்லும்ன்னு பார்த்தா நீங்க வந்து சொல்லுறீங்க. அதுவும் ஒரு வகையில சரிதான். பெரியவங்களும் குழந்தைகள் மாதிரி தானே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements

%d bloggers like this: