அரும்புகள்

மழலையர் தமிழ்ப் பாடல்கள் தொகுப்பு–1 [விலங்குகள்]

Posted on: மார்ச் 7, 2008


டக்குடக்கு கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டிகுட்டி சுண்டெலிகள்
எட்டிஎட்டிப் பார்த்தனவே
டண்டண் என்றது கடிகாரம்
தாவி வந்தது கரும்பூனை
கண்டு மிரண்ட சுண்டெலிகள்
காற்றாய் பறந்து மறைந்தனவே******நானானி


குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் வந்ததாம்
பாவம் அதற்கு பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்*******நிஜமா நல்லவன்


அணிலே அணிலே ஓடிவா!
அழகிய அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா!
குண்டு பழம் கொண்டுவா!
பாதி பழம் உன்னிடம்
மீதி பழம் என்னிடம்!
கொறித்து கொறித்து தின்னலாம்********ஆஷிஷ் அம்ருதா


வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சினஞ்சிறு கைகளால்செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய் தோன்றும் முயலக்கா**********நிஜமா நல்லவன்


கோழி கிளறினால் வேலி போடலாம்
வாடா கண்ணா வா!
வேலியை ஆடு தாண்டிவிடுமே
போடா வரமாட்டேன்!

கீரை விதைப்போம் கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை வளரத் தண்ணீர் வேண்டுமே
போடா வரமாட்டேன்!

கேணி நீரை இறத்துக் கொள்ளலாம்
வாடா கண்ணா வா!
கீரை வளர்ந்தபின் என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!

கீழைத் தெருவில் விற்றுவிடலாம்
வாடா கண்ணா வா!
விற்ற பணத்தை என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!

வீணாக்காமல் வங்கியில் சேர்ப்போம்
வாடா கண்ணா வா!
வீடும் நாடும் வாழ்த்த வாழ்வோம்
வா வா அண்ணா வா!*********************பாசமலர்


தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு
உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு
பாலை நன்றாய் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு
மடிமுட்டி குடிக்குது கன்றுக்குட்டி*********நிஜமா நல்லவன்


யானை யானை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
கட்டிக்கரும்பைக் கடிக்கும் யானை
காவேரித்தண்ணீரைக் கலக்கும் யானை***********பொன்வண்டு

10 பதில்கள் to "மழலையர் தமிழ்ப் பாடல்கள் தொகுப்பு–1 [விலங்குகள்]"

டீச்சர், பாட்டெல்லாம் ஜூப்பராகீது…

சூப்பர் டீச்சர்!

தொகுப்பு நல்லா இருக்கு.

நல்ல தொகுப்புமாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்சேலத்து மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா ?————————தட்டு நிறைய லட்டுலட்டு மொத்தம் எட்டுஎட்டில் பாதி விட்டுஎடுத்தான் மீதி கிட்டுபட்டு நான்கு லட்டுகிட்டு நான்கு லட்டுமீதம் காலி தட்டு !————————நிலா நிலா ஓடி வாநில்லாமல் ஓடி வாமலை மீது ஏறி வாமல்லிகைப்பூ கொண்டு வாநடு வீட்டில் வைநல்ல துதி செய்————————-

படித்ததும் சிலது நினைவுக்கு வந்தது.ரொம்ப லல்லாருக்கு!!!!!!!!நாந்தேன் பஸ்ட் அதைவிட லல்லாருக்கு!!

காக்கா காக்காஅ கண்ணுக்கு மை கொண்டுவா பாடலை போடாததாலே… காகமெல்லாம் இங்கே ஸ்ட்ரைக் செய்றாங்க. அவங்களை உங்க வீட்டாண்ட அனுப்பி வச்சேன். வந்தாங்களா?

நிறையப் பாடல்கள் இருக்கு அதான் தனித் தனி தொகுப்பா போட எண்ணம்அதுக்குள்ள இந்த காக்கா இப்படி பறக்குதே..ச்சூ…ச்சூ…

INDHA PAADALGALAI YAAR EZUDHINANGANNU POTINGANNA INNUM NALLA IRUNDHIRUKKUM. PAADALGAL EZUDHINAVANGALUKU NAAMA SEIYUM MARIYAADHAIYAAVUM IRUKKUM. PAADALGALAI MATTUMINDRI IDHAI EZUDHINAVANGALAIYUM MARAKKAMA IRUKKA UDHAVUM ILLAYA.

WELCOME GEETHA padanggaL UBAYAM GOOGLE ANDAVAR .BUT THEY LOOK LIKE REAL PHOTOS TAKEN .SO THANK GOOGLE IMAGE

good effort.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: