அரும்புகள்

மழலையர் பாடல்கள் தொகுப்பு-6

Posted on: மார்ச் 18, 2008

சிட்டு

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு !!>>>>>>>>பொன்வண்டு

சேர்ந்து செய்வோம் !

துண்டு தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன் !

துண்டு துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள் !

வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர் !
சின்னப்பையன் கண்டனர்
சேர்த்துப் பூக்கள் செய்தனர் !

சிறிய பொருளும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே !!!>>>>>>>>பொன்வண்டு

மரம் வளர்ப்போம்

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறதே !
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறதே !

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வாபோல பழம் தருது !
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது !

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே !!!>>>>>>>>பொன்வண்டு

4 பதில்கள் to "மழலையர் பாடல்கள் தொகுப்பு-6"

படங்களும், பாட்டுகளும் நல்லா சூப்பரா இருக்கு 🙂

paattu supparaa irukku athaivida padankal arumai

“தாத்தா ஓ ..தாத்தா !” “என்னடா பிச்சை ? ” “நேக்கு ஒரு பாட்டு பாடேன் ! ” “உனக்கு என்ன பாட்டு வேணும் ? அதான் என்னோட பிளாக் லே கிலுகிலுப்பை பாடியிருக்கேனே ! ” “போ தாத்தா ! அது பழசாப்போச்சு ! அப்பறம் ..ஸ்கூல்லே அத எல்லாரும் பாடறாங்க..எனக்கு புதுசா ஒன்னு கத்துத் தா..” “நா எங்கேடா போவேன் புதுப் பாட்டுக்கு ?” “சிட்டே சிட்டே பறந்து வா” பாட்டு பாடு !” “ஐயய்யோ அதப் பாடினா அவுக என் பாட்டை எப்படி நீ பாடலாம்னு கேசு போட்ருவாகளே !” “நான் போய் அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கித்தாரேன். நீ பாடு தாத்தா..” ” சரி, இந்த 3 பாட்டிலே எல்லாமே நல்லா இருக்கே !! எத முன்னாடி பாடறது ? எதப் பாடினாலும் இது அவங்களோடதுன்னு சொல்லிப்போடுவோம்.” சுப்பு ரத்தினம். தஞ்சை. http://arthamullavalaipathivugal.blogspot.com http://menakasury.blogspot.com http://movieraghas.blogspot.com

பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கு. படங்களும் அதற்கேப்ப அழகாஇருக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: