அரும்புகள்

Archive for ஏப்ரல் 2008


ஒன்னு ரெண்டு மூனு நாலு
எண்ணிச் சொல்லு குட்டித் தம்பி
கையைக் காலை தூக்கி நானும்
செய்திடுவேன் உடற்பயிற்சி
சோம்பித் திரிந்த காலம் போச்சி
சுறுசுறுப்பு கூடிப் போச்சி

பொறியில் வைத்த வடை வேண்டாம்
ஊசிப் போயி நாளாச்சு
தட்டில் வைத்துத் தாருங்கள்
சமர்த்தாய் நானும் தின்றிடுவேன்

கொட்டும் மழையும் ஓய்ந்ததே
கோடை வெயில் தகிக்குதே
சுற்றிச் சுழலும் மின்விசிறி
சுகமாய்க் காற்றைத் தருகிறதே

அரச மரமும் அலுத்துப் போச்சு
தெருக்கோடியும் திகட்டிப் போச்சு
கம்ப்யூட்டர் காலமாச்சு
கணபதிக்கும் தேவையாச்சு
வலையுலகம் வந்துட்டாரு
பதிவெழுத தொடங்கிட்டாரு

Advertisements

Advertisements