அரும்புகள்

சமீப காலமாக சன் தொலைக்காட்சியில் வரும் ஒரு குளியல் சோப்பு விளம்பரம் பார்த்திருப்பீங்க.
நடிகை தமன்னா கிறங்கடிக்கும் குரலில் ‘நேச்சர் பவர் சோப்பின் பியூட்டி’ எனப் பாடும் விளம்பரம்.பாடலின் முடிவில் 76%TFM இருக்குன்னு முடிப்பார்.
பொதுவா சோப்பு விளம்பரங்களில் நறுமணம்,அழகைக் கூட்டும் தன்மை மட்டுமே பிரதானமாகக் கூறப்படும்.இது என்ன புதிதாக டிஃஎபெஎம் எனத் தெரிந்து கொள்வோம்.
டிஃஎப் எம் [TFM]என்பது குளியல் சோப்பில் உள்ள மொத்த கொழுப்புச் சத்தின் அளவு[Total Fatty Matter].
சோப்பு என்பதே தாவர கொழுப்பு எண்ணைகளிலிருந்து கிடைக்கும் பொருள்தான்.இதில் உள்ள கரிம அணுக்களின் எண்ணிக்கை 15 க்கு மேல் 35 வரையில் இருப்பதால் இவை உயர் கொழுப்பு எண்ணைகள் எனப்படும்.இந்த கொழுப்புச் சத்தின் அளவீட்டைத்தான் டிஃஎபெம் என்கிறோம்.
இயற்கையான தாவரக் கொழுப்புடன் செயற்கைக் கொழுப்புப் பொருளும் சேர்ந்ததுதான் TFM எனப்படும்.இதுவே சோப்பு நீரில் கரையும் போது அதிக அளவு நுரையைத் தருகிறது.
பொதுவாக சோப்பில் 70 முதல் 80 சதவீதம் கொழுப்புபொருளும் 10 முதல் 16 சதவீதம் ஈரப்பதமும் இருக்கும்.
டிஃஎபெம் அளவு 80% க்கு மேல் உள்ளவை உயர்ரக சோப்புகளாக கருதப்படும்.
65-80%உள்ளவை இரண்டாவது ரகமாகக் கருதப்படும்.
சில மூலிகை ஆயுர்வேத சோப்புகள் விதி விலக்கு.
நல்ல தரமான சோப்பில் டிஃஎப் எம் அதிகம் இருக்கும்.
பல நல்ல தரமான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன.மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப் படுகின்றன.
அதற்காக எல்லாவிதமான சோப்புகளையும் மாற்றி மாற்றி வாங்கி உபயோகிப்பது நல்லதில்லை.மருத்துவர்கள் கூட ஏதேனும் ஒரே வகை சோப்பையே பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்துவார்கள்.
நம் உடலின் துர்நாற்றத்திற்கு பாக்டீரியாக்களே [நுண்ணுயிரிகள்]காரணமாகின்றன.இதில் நல்ல வகை கெட்டவகை இரண்டும் உண்டு.எந்த சோப்பும் குறிப்பிட்டவகை பாக்டீரியாவை மட்டுமே அழிக்கக்கூடியதாக இருப்பதில்லை.ஆனால் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வகை சோப்பை மட்டுமே பயன்படுத்தும் போது தோல் அதற்கு தகுந்தவாறு ஒத்திசைகிறது.அடிக்கடி சோப்பை மாற்றுவதால் அதில் உள்ள கொழுப்புக் கலவைகள் வேதிப் பொருட்களின் மாறுபாட்டால் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டு முகப்பரு,தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு காரணமாகிறது

இனி குளியல் சோப் வாங்கும் போது எத்தனை சதவீதம் டிஃஎப்எம் எனப் பார்ப்பீங்க தானே

Advertisements

5 பதில்கள் to "TFM"

நல்ல தகவல். நன்றி

//சோப்பு என்பதே தாவர கொழுப்பு எண்ணைகளிலிருந்து கிடைக்கும்//இல்லையே. பல சோப்புகள் மிருகக்கொழுப்புகளில் இருந்தும் தயாரிக்கப்படுதே.

//மலரும் மொட்டுக்களுக்காக ஒரு தளம்//அப்போ பெருசுக எல்லாம் வரக்கூடாதா? வந்து //தமன்னா கிறங்கடிக்கும் குரலில் 'நேச்சர் பவர் சோப்பின் பியூட்டி' எனப் பாடும் ..// -இதுக்கெல்லாம் ஆமாம் … ஆமாம் போடலாமா?

Mysore sandal soap is above 80% TFM.(Total Fat Mixture) Not Matter.

நன்றி அமுதாசின்னஅம்மிணி மிருகக் கொழுப்பும்ம்ம்ம் உண்டுங்கோதருமி சார்..ஹூம்ஹூம்..தமன்னா பேருக்காக இங்கே வருகையா….நலந்தானே சார்?அனானி நீங்க மைசூர் சோப்பா? ஓகே நன்று

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements

%d bloggers like this: