அரும்புகள்

பதிவர் தொகுப்புகள்


1
11
21
1211
111221
312211
13112221
1113213211

இந்த வரிசையில் அடுத்து வரக்கூடிய வரிசை எண்களைக் கண்டு பிடியுங்கள்.
2
12
1112
3112
132112
1113122112
311311222112
இந்த தொடரிலும் அடுத்து வரக்கூடிய வரிசைஎண்களைக் கண்டுபிடியுங்கள்
கண்டுபிடித்து விட்டால்,இது போன்ற எண்களின் தொடர் வரிசையை நீங்களே உருவாக்கலாம்.எத்தனை வரிசைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம்.

புதிர் விடை:கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
ஹூம் ஹூம் சொல்ல மாட்டேன்.முயற்சி செய்யுங்கள்.மிக எளிதுதான்.இல்லையென்றால் பிறகு சொல்கிறேன்.

Advertisements

சமீப காலமாக சன் தொலைக்காட்சியில் வரும் ஒரு குளியல் சோப்பு விளம்பரம் பார்த்திருப்பீங்க.
நடிகை தமன்னா கிறங்கடிக்கும் குரலில் ‘நேச்சர் பவர் சோப்பின் பியூட்டி’ எனப் பாடும் விளம்பரம்.பாடலின் முடிவில் 76%TFM இருக்குன்னு முடிப்பார்.
பொதுவா சோப்பு விளம்பரங்களில் நறுமணம்,அழகைக் கூட்டும் தன்மை மட்டுமே பிரதானமாகக் கூறப்படும்.இது என்ன புதிதாக டிஃஎபெஎம் எனத் தெரிந்து கொள்வோம்.
டிஃஎப் எம் [TFM]என்பது குளியல் சோப்பில் உள்ள மொத்த கொழுப்புச் சத்தின் அளவு[Total Fatty Matter].
சோப்பு என்பதே தாவர கொழுப்பு எண்ணைகளிலிருந்து கிடைக்கும் பொருள்தான்.இதில் உள்ள கரிம அணுக்களின் எண்ணிக்கை 15 க்கு மேல் 35 வரையில் இருப்பதால் இவை உயர் கொழுப்பு எண்ணைகள் எனப்படும்.இந்த கொழுப்புச் சத்தின் அளவீட்டைத்தான் டிஃஎபெம் என்கிறோம்.
இயற்கையான தாவரக் கொழுப்புடன் செயற்கைக் கொழுப்புப் பொருளும் சேர்ந்ததுதான் TFM எனப்படும்.இதுவே சோப்பு நீரில் கரையும் போது அதிக அளவு நுரையைத் தருகிறது.
பொதுவாக சோப்பில் 70 முதல் 80 சதவீதம் கொழுப்புபொருளும் 10 முதல் 16 சதவீதம் ஈரப்பதமும் இருக்கும்.
டிஃஎபெம் அளவு 80% க்கு மேல் உள்ளவை உயர்ரக சோப்புகளாக கருதப்படும்.
65-80%உள்ளவை இரண்டாவது ரகமாகக் கருதப்படும்.
சில மூலிகை ஆயுர்வேத சோப்புகள் விதி விலக்கு.
நல்ல தரமான சோப்பில் டிஃஎப் எம் அதிகம் இருக்கும்.
பல நல்ல தரமான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன.மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப் படுகின்றன.
அதற்காக எல்லாவிதமான சோப்புகளையும் மாற்றி மாற்றி வாங்கி உபயோகிப்பது நல்லதில்லை.மருத்துவர்கள் கூட ஏதேனும் ஒரே வகை சோப்பையே பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்துவார்கள்.
நம் உடலின் துர்நாற்றத்திற்கு பாக்டீரியாக்களே [நுண்ணுயிரிகள்]காரணமாகின்றன.இதில் நல்ல வகை கெட்டவகை இரண்டும் உண்டு.எந்த சோப்பும் குறிப்பிட்டவகை பாக்டீரியாவை மட்டுமே அழிக்கக்கூடியதாக இருப்பதில்லை.ஆனால் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வகை சோப்பை மட்டுமே பயன்படுத்தும் போது தோல் அதற்கு தகுந்தவாறு ஒத்திசைகிறது.அடிக்கடி சோப்பை மாற்றுவதால் அதில் உள்ள கொழுப்புக் கலவைகள் வேதிப் பொருட்களின் மாறுபாட்டால் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டு முகப்பரு,தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு காரணமாகிறது

இனி குளியல் சோப் வாங்கும் போது எத்தனை சதவீதம் டிஃஎப்எம் எனப் பார்ப்பீங்க தானே

குழந்தைகளே!
நாம் ஏதாவது செய்யும்போது பலபேர் பலவிதமாக பேசுவார்கள்.ஒருவருக்கு சரியென்று படுவது இன்னொருவருக்குத் தப்பாகத் தெரியலாம்.அதனால் நமக்கு எது சரியென்று தேன்றுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அப்படி நடந்த ஒரு வேடிக்கையைப் பாருங்கள்.

ஒரு தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த ஒருவர் ‘கழுதை சும்மாதானே செல்கிறது.யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே’ என்றார்.
அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார்.
கொஞ்ச தூரம் போனதும் எதிரே வந்த ஒருவர்,’ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு,நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?’ எனக் கேட்டார்.
உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான்.
தந்தையும் அவ்வாறே செய்தார்.இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு,
இன்னொருத்தர் பார்த்து தந்தையைக் கடிந்து கொண்டார்.
‘ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?’என
தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இரண்டுபேருமே ஏறிச் செல்வோம் என கழுதையிம் முதுகில் ஏறிக் கொண்டனர்.

இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர்,’அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள்.இவர்களுக்கு இரக்கமே இல்லையா’?என எள்ளி நகையாட,
மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும் கழுதையை விட்டு இறங்கியதோடு இல்லாமல்,இருவருமாகச் சேர்ந்து கழுதையைத் தூக்கி தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினர்.
இதைகண்டதும் அங்கிருந்தவர்கள் ‘ இதென்ன கூத்து! இப்படியுமா முட்டாள்கள் இருப்பார்கள் என ஓஹோ என’ கூச்சலிட்டு நகைக்கவும் அரண்டு போன கழுதை கீழே குதித்து அவர்களையும் கீழே தள்ளி விட்டு ஓட்டமெடுத்தது.

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் ஓடிப் போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.

எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம்.எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காமல் நாமாகவே நல்லது எது கெட்டது என்பதை யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.

குட்டீஸ்!உங்களுக்காக சில புதிர்கள்.

1.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்
நான் யார்?

2.நான் நானாக இருப்பேன்
நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?

3.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்
நான் யார்?

4.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென
நான் யார்?

5.உனக்கு முன்னாலும் போவேன் பின்னாலும் தொடர்ந்து வருவேன்.
ஆனால் ஒருபோதும் மேலே போக மாட்டேன்

6.என் உடல் முழுவதும் காற்று
ஆனாலும் நான் சுவாசிக்க மாட்டேன்
நான் யார்?

7.என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவன்.
நான் யார்?

8.நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?

9.மேலே மட்டுமே போவேன்;கீழே வரமாட்டேன்
நான் யார்?

10.ஏழைகளிடம் இருப்பவன்;பணக்காரர்களுக்குத் தேவைப்படுபவன்
நான் யார்?
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*

*
*
*
*
*

*

*

*

*

*

*

*

**புதிருக்கான விடைகள்:
1.மவுனம் 2.புதிர் 3.தீ 4.நாளை 5.நிழல் 6.பலூன் 7.இரகசியம் 8.’e’என்ற ஆங்கில எழுத்து
9.வயது 10.ஒன்றுமில்லை

கீழே உள்ள படத்தை பாருங்க.இது என்னன்னு கேட்டா நாலு செவ்வகப் பட்டையும் நடுவில் ஒரு சின்ன வட்டமும் என்று சொல்வீங்க.
ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானே
இப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் ‘ட்ரூடுல்ஸ் ‘ புதிர் னு பேர்.

ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாக பயன்படுவது.உண்மையில் இவை அர்த்தமற்ற கிறுக்கல்கள்தான்.
உங்க வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது ‘போர்’ அடிச்சா என்ன செய்வீங்க?இல்லை வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்கும் போதோ அல்லது ஏதோ சிந்தித்தபடியே இருக்கும் போது உங்க கையில் ஒரு பேப்பரும் பேனாவும் அல்லது பென்சிலோ கிடைத்தால் எதையாச்சும் கிறுக்குவீங்கதானே. பிறகு அது என்னன்னு பார்த்தா ஆளுக்கொரு விதமா தோன்றும்.அதுக்குத்தான் ‘டூடுல்ஸ்’ [doodle]னு பேர்.

வீட்டில் போன் பேசும் போது சிலபேர் போன் புத்தகத்தில் எதையாவது வரைவாங்க.சில மாணவர்கள் வகுப்பில் எதையாவது கிறுக்கி ஒரு அவுட்லைன் போல கோடுகள் வரைந்து இது கணக்கு வாத்தியார் இது தமிழ் அய்யா னு குறும்பு செய்வாங்க.
இந்த மாதிரி அர்த்தமற்ற கிறுக்கல்களுக்கு கோட்டுச் சித்திரங்கள் [டூடுல்ஸ்]னு பேர்.
அதையே ஒரு ‘புதிர்’ [riddle] போல மாற்றி என்னன்னு கண்டு பிடிக்கச் சொன்னால் அதுக்குத்தான் ட்ரூடுல்ஸ் னு பேர்.

டூடுல்ஸ் [doodles] +ரிடில்ஸ் [riddles]=ட்ரூடுல்ஸ் [droodles] சரியா?

இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ரோஜர் ப்ரைஸ் என்னும் காமெடி எழுத்தாளர்.1950 களில் இது குறித்த புத்தகங்களை எழுதினார்.பின்னர் லியனார்ட் ஸ்டெர்ன் என்னும் தன் நண்பருடன் சேர்ந்து மேட் லிப்ஸ் [mad libs] என்னும் கதை சொல்லும் விளையாட்டை உருவாக்கினார்.
அந்தக் காலத்துல தமிழ்வாணன் என்ற தமிழ் நாவலாசிரியர் கூட தன் துப்பறியும் கதைகளில் இப்படி கோட்டுச் சித்திரங்களைப் பயன்படுத்தியிருக்கார்.
பின்னர் தொலைக்காட்சிகளில் ‘கேம் ஷோ’ எனப்படும் நிகழ்ச்சிகளில் இந்த ட்ரூடுல்ஸ் பிரதான இடம் பிடித்தது.நோட்டுப் புத்தகங்கள் சுவர் விளம்பரங்கள் ஷாப்பிங் பைகள் எல்லாவற்றிலும் இந்த கிறுக்கல் சித்திரங்கள் இடம் பிடித்தன.

முதலில் பார்க்கும் போது அர்த்தமற்ற கிறுக்கள்களாக தெரிந்தாலும் உற்று நோக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தெரியும் எனவே இந்த வகைப் புதிர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான ‘பதில்கள்’ இருக்கக் கூடும்.
இந்த வகை விளையாட்டுக்கள் ஞாபக சக்தி,கற்பனைத் திறன்,புதுப் புது சிந்தனைகளை வளர்க்க உதவும்.

உங்க பார்வைக்கு சில கீழே உள்ளன.

இது ஒரு பட்டர்ப்ளை கம்பியில் ஏறுகிறது [அ] ஒரு முக்கோணத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரிகிறது னும் சொல்லலாம்.


இது i என்ற எழுத்தின் நிழல் [அ] ஐ ஷேடோ [ஒரு முக அலங்காரம்]

இது நேரம் ஐந்து எனச் சொல்கிறது


இது தொப்பி அணிந்த உருவம் [அ] முறுக்கி விடப்பட்ட மீசை


இது கண் பரிசோதனை ஆஸ்பிட்டலில் உள்ள பலகை
[அ] இதில் L என்ற எழுத்து இல்லை.எனவே NO ‘L’ ஆகும். Noel என்றால் கிறிஸ்துமஸைக் குறிக்கும்.
இது ஒரு கண்ணாடி [அ] மழைத் துளிகள்
இது நீர் தேங்கிய குட்டை [அ] முட்டை தோசை
இது பாரா சூட் [பாதி விலையில் கிடைக்கிறதாம் ஹாஹா]
இது ஹீரோவும் வில்லனும் [அ]நன்மையும் தீமையும் [இடத்துக்குத் தக்கவாறு]
இது டூத் பிரஷ் [அ] ஷூ பாலிஷ் பிரஷ் [அ] தடுப்பு சுவர்[வேலி]
என்ன சுவாரஸ்யமா இருக்கா?சரி .
கீழே கட்டத்தில் உள்ள வரை படங்களைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து நிறைய புதுப் புது ட்ரூடுல்ஸ் உருவாக்கலாம்.உங்க நண்பர்களோடு விளையாடலாம்.[விடுமுறையில்]

குட்டீஸ்!
காட்சிப்பிழை அல்லது தோற்றப்பிழை என்றால் என்னெவென்று தெரியுமா உங்களுக்கு?அடைத்தான் ஆங்கிலத்தில்இல்யூஷன்‘ ‘ஆப்டிகல் இல்யூஷன்னு சொல்வாங்க.
இங்க கீழேயிருக்கும் படத்தைப் பாருங்க.ஆப்டிகல் இல்யூஷ்ன்னு எழுதியிருக்கா?அதையே இன்னும் கொஞ்சம் கூர்ந்து பாருங்க. ஆப்டிகல் என்று தோன்றும்.

முதல் பார்வையில் சட்டென்று ஒரு தோற்றமும்,கூர்ந்து நோக்கும் போது வேறு தோற்றமும் புலப்படும் நிலைதான் இல்யூஷன் எனப்படுவது.
நமது மூளையும் கண்களூம் சேர்ந்து நம்மை ஏமாற்றும் வேலைதான் அது.
பொதுவாக நமது மூளை எதையும் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடனே பார்க்க முனையும் போது கண்களும் அத்துடன் ஒத்துழைத்து பிம்பத்தை புலப்படச் செய்கின்றன.
கீழே உள்ள படங்களில் முதல் படத்தில் TEACHஎன்றும் இரண்டாவது படத்தில் ME என்றும் இருப்பது கூர்ந்து பார்த்தால் LEARN என்றும் YOU என்றும் தெரியும்.
இப்படித்தான் இல்லாததைஇருப்பதாக கற்பனைசெய்வதில் மூளைக்கு பெரும்பங்கு இருக்கிறது என்றால் அதற்குஆமாம் சாமிபோடுவது நம் கண்கள்.
இரவு நேரத்திலும் இருட்டான வேளைகளிலும்பேய் பிசாசு இருப்பதாக கற்பனையான எதிர்பார்ப்புடன் நாம் பார்க்க,ஏதேனும் நிழல் தெரிந்தால் கூட கண்கள் அதை பேய்போல சந்தேகத்துடன் பார்க்க பயப்படுகிறோம்.
கீழே உள்ளப் படத்தைப் பாருங்க
எந்தப் படமும் அசைவதில்லை.அனிமேஷனும் இல்லை.ஆனாலும் உற்று நோக்கினால் சுழல்வது போலத் தோன்றும்.


ஆனால் இந்த மூளையும்,கண்களும் இப்படியாககூட்டு சதிசெய்வதால்தான் தொலைக்காட்சிகளிலும்,கணிணித் திரையிலும் நம்மால் பிம்பங்களையும்,அசையும் படங்களையும் பார்க்க முடிகிறது.
என்ன குட்டீஸ் இப்பவே கண்ணைக் கட்டுதா?

குட்டீஸ்
நல்லா இருக்கீங்களா?விடுமுறையெல்லாம் இனிமையாக கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நானும் அதிக வேலை காரணமாக பதிவு போட முடியலை.
இதோ ஒரு குட்டிக் கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்…

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர்.
வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக இயலவில்லை.

பின்னர் ஒருமுறை அவன் வியாபாரம் செய்ய சென்ற ஊரிலிருந்து மிக பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததால் மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போயிருந்தான்.
வெகுநாள் கழித்து விருந்துக்கு வந்த மருமகனை மாமியாரும் நன்கு உபசரித்தாள்.வேளைக்கு ஒரு பலகாரம் செய்து அசத்தினாள்.

அதில் மருமகனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டையே மிகவும் பிடித்தமானதாக இருந்தது.மேலும் மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே மனனம் செய்து உச்சரித்தபடியே நடந்தான்.

வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்தது.அதைத் தாண்டிச் செல்லும் நோக்கில் குதித்தவன் சட்டென்று ‘அத்திரி பாச்சா’ என்றான்.
மிகப் பிரயத்தனப் பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்பவர்கள் இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது ‘அத்திரி பாச்சா’எனக் கூற பிறகு கொழுக்கட்டைப் பேரை மறந்து அத்திரி பாச்சா எனக் கூறிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

மனைவியிடம் மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்துக் கூறியவன் எனக்கு அதே போல அத்திரி பாச்சா செய்து கொடு என்றான்.
மனைவி குழம்பிப் போனாள்.இதென்ன புதுப் பேராக உள்ளது.இப்படியொரு பலகாரம் எனக்குத் தெரியாதே என்றாள்.

கணவன் திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல மனைவி தெரியாது என்றே கூற கோபமான அவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய கன்னம் வீங்கிப் போனது.

இதைப் பார்த்த அவன் அம்மா அடப்பாவி இப்படி அடித்து கன்னம் கொழுக்கட்டை போல் வீங்கி விட்டதே என
அவன் சந்தோஷத்தில் குதித்தபடி அதேதான்….அந்தப் பேர்தான் கொழுக்கட்டை …கொழுக்கட்டை என்று குதித்தான்.
இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் பேரை மறந்து அத்திரி பாச்சா என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறையச் செய்து கொடுத்தாள்…

குட்டீஸ் உங்களுக்கும் [அத்திரி பாச்சா] கொழுக்கட்டை பிடிக்கும் தானே?


Advertisements