அரும்புகள்

Archive for the ‘அறிவியல்’ Category

குட்டீஸ்!
காட்சிப்பிழை அல்லது தோற்றப்பிழை என்றால் என்னெவென்று தெரியுமா உங்களுக்கு?அடைத்தான் ஆங்கிலத்தில்இல்யூஷன்‘ ‘ஆப்டிகல் இல்யூஷன்னு சொல்வாங்க.
இங்க கீழேயிருக்கும் படத்தைப் பாருங்க.ஆப்டிகல் இல்யூஷ்ன்னு எழுதியிருக்கா?அதையே இன்னும் கொஞ்சம் கூர்ந்து பாருங்க. ஆப்டிகல் என்று தோன்றும்.

முதல் பார்வையில் சட்டென்று ஒரு தோற்றமும்,கூர்ந்து நோக்கும் போது வேறு தோற்றமும் புலப்படும் நிலைதான் இல்யூஷன் எனப்படுவது.
நமது மூளையும் கண்களூம் சேர்ந்து நம்மை ஏமாற்றும் வேலைதான் அது.
பொதுவாக நமது மூளை எதையும் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடனே பார்க்க முனையும் போது கண்களும் அத்துடன் ஒத்துழைத்து பிம்பத்தை புலப்படச் செய்கின்றன.
கீழே உள்ள படங்களில் முதல் படத்தில் TEACHஎன்றும் இரண்டாவது படத்தில் ME என்றும் இருப்பது கூர்ந்து பார்த்தால் LEARN என்றும் YOU என்றும் தெரியும்.
இப்படித்தான் இல்லாததைஇருப்பதாக கற்பனைசெய்வதில் மூளைக்கு பெரும்பங்கு இருக்கிறது என்றால் அதற்குஆமாம் சாமிபோடுவது நம் கண்கள்.
இரவு நேரத்திலும் இருட்டான வேளைகளிலும்பேய் பிசாசு இருப்பதாக கற்பனையான எதிர்பார்ப்புடன் நாம் பார்க்க,ஏதேனும் நிழல் தெரிந்தால் கூட கண்கள் அதை பேய்போல சந்தேகத்துடன் பார்க்க பயப்படுகிறோம்.
கீழே உள்ளப் படத்தைப் பாருங்க
எந்தப் படமும் அசைவதில்லை.அனிமேஷனும் இல்லை.ஆனாலும் உற்று நோக்கினால் சுழல்வது போலத் தோன்றும்.


ஆனால் இந்த மூளையும்,கண்களும் இப்படியாககூட்டு சதிசெய்வதால்தான் தொலைக்காட்சிகளிலும்,கணிணித் திரையிலும் நம்மால் பிம்பங்களையும்,அசையும் படங்களையும் பார்க்க முடிகிறது.
என்ன குட்டீஸ் இப்பவே கண்ணைக் கட்டுதா?

Advertisements

குட்டீஸ்!
நீங்க நிறைய வகையான கடிகாரங்கள் பார்த்திருப்பீங்க.
இதற்கு மணற் கடிகாரம் னு பேர்.மேலே உள்ள மணல் கீழ்ப் பகுதிக்கு வரும் அதை வைத்தே அந்தக் காலத்தில் நேரத்தை கணக்கிடுவார்கள்.

அதற்கு பின்பு 1….12 வரை எண்கள் குறிக்கப் பட்ட ‘அனலாக்’ வகை கடிகாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

ரோமன் எழுத்துக்களால் ஆன வகையிது

எண்களே இல்லாமல் கோடுகள் அல்லது புள்ளிகளைக் கொண்டது

டிஜிட்டல் வகையான கடிகாரங்கள்

இது ஒரு வேதியியல் கடிகாரம் .அணு எண் 1 முதல் 12 வரை உள்ள தனிமங்களின் [elemets] குறியீடு[symbol] குறிக்கப்பட்ட இதற்கு ‘கெம் டைம் கடிகாரம்'[chem time clock] னு பேர்.

கடிகாரங்களின் வகைகள் மாறினாலும் அவை காட்டும் நேரம் ஒரே மாதிரிதானே இருக்கும்.

அன்பான குழந்தைகளே

உங்களுக்கெல்லாம் அமிலமழைன்னா என்னன்னு தெரியுமா?
அதுக்கு முன்பாக அமிலத்தன்மைன்னா என்ன காரத் தன்மைன்னா என்னன்னு பார்ப்போம்.
ஒரு திரவம் அல்லது கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் மதிப்பைக் கொண்டே அதன் அமிலத் தன்மை அறியப் படுகிறது.
இதை pH என்ற அளவால் குறிப்பிடுகிறோம்.

pH= -log10^H+

அதாவது ஒரு கரைசலின் ஹைடரஜன் அயனிச் செறிவினுடைய 10 அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மறை எண்ணாகும்.[negative logrithm to the base 10 of hydrogen ion concentration]
இப்படி பத்தின் ம்டங்காக இருப்பதால் ஒரு அலகு [unit]pH மாற்றம் என்பது முன்னயதைவிட பத்து மடங்கு அதிகமாக இருக்கும்.
இனி சில பொருட்களில் உள்ள அமிலத்தன்மையைப் பார்ப்போம்.

[படத்தின் மீதுகிளிக்கிப் பார்க்கவும்[

pH மதிப்பு

7 என்பது நடுநிலைக் கரைசலையும்
<7 என்பது அமிலக் கரைசலையும்
>7 என்பது காரத்தன்மையையும் குறிக்கும் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

சாதாரண மழை நீரின் pH மதிப்பு 5.6. ஆனால் சுற்றுச் சூழல் மாசு படுதலால் வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயு [C02] மழை நீருடன் சேர்ந்து கார்பானிக் அமிலமாக மாறும்போது மழை நீரில் pH குறைந்து அமிலத் தன்மை அதிகரிக்கிறது. இதைத்தான் அமில மழை என்கிறோம்.
இது மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் சேரும் நைடஜன் -டை-ஆக்ஸைடு ,கந்தக -டை-ஆக்ஸைடும் மழை நீருடன் அமிலமாக மாறுவதால் அமிலமழை பெய்கிறது.இது பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு பளிங்கினால் கட்டப் பட்ட பெரிய கட்டிடங்கள்,நினைவுச் சின்னங்களையும் சிதிலமடையச் செய்கிறது.


Advertisements