அரும்புகள்

Archive for the ‘கணிதப் புதிர்’ Category


1
11
21
1211
111221
312211
13112221
1113213211

இந்த வரிசையில் அடுத்து வரக்கூடிய வரிசை எண்களைக் கண்டு பிடியுங்கள்.
2
12
1112
3112
132112
1113122112
311311222112
இந்த தொடரிலும் அடுத்து வரக்கூடிய வரிசைஎண்களைக் கண்டுபிடியுங்கள்
கண்டுபிடித்து விட்டால்,இது போன்ற எண்களின் தொடர் வரிசையை நீங்களே உருவாக்கலாம்.எத்தனை வரிசைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம்.

புதிர் விடை:கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
ஹூம் ஹூம் சொல்ல மாட்டேன்.முயற்சி செய்யுங்கள்.மிக எளிதுதான்.இல்லையென்றால் பிறகு சொல்கிறேன்.

Advertisements

குட்டீஸ்!

குட்டீஸ் முன்பு சுலபமாய் 9 ஆல் பெருக்கச் சொல்லிக் கொடுத்தேன்.

இப்போது இன்னும் சுலபமாய் 11 ஆல் பெருக்க சொல்லித்தரப் போகிறேன்.

ஒற்றை இலக்க எண்களைச் சுலபமாய் 11ஆல் பெருக்க முடியும்.

இரட்டை இலக்க எண்களை எப்படி 11 ஆல் பெருக்குவது?:

உதாரணமாக 12×11=132 இதில் அந்த இரண்டு எண்களையும்

கூட்டிக் கொள்ளவும் 1+2=3 இந்த கூட்டுத்தொகையை அப்படியே

இரண்டுக்கும் நடுவில் சேர்க்க வேண்டியதுதான். 1 3 2 சரியா?

இன்னொரு உதாரணம்: 56×11=616 [5+6=11] இதை இரண்டுக்கும் நடுவில் எழுதினால்
5+1 1 6 =6 1 6 [கூட்டுத்தொகை இரண்டு இலக்கத்தில் வரும்போது பதின்ம எண்ணை [செகண்ட் டிஜிட்] முதல் எண்ணுடன் கூட்டவும்.

இரண்டுக்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட எண்களை 11 ஆல் பெருக்குதல்:

உதாராணமாக 34781×11 = 382591

வலது புறத்திலிருந்து ஆரம்பித்து முதல் இலக்க எண்ணை அப்படியே எழுதவும்.1+0=1
அடுத்து முன்னால் உள்ள எண்ணுடன் அடுத்த எண்ணைக் கூட்டி எழுதியபடி செல்லவும்.

1+0=1
1+8=9
8++7=15
7+4=11
4+3=7
3+0=3 3 7 11 15 9 1= 382591 [பதின்ம எண்ணை அடுத்த எண்ணுடன் கூட்டவும்]

இன்னொரு உதாரணம் 7946732×11= 87414052
2+0=2
3+2=5
7+3=10
6+7=13
4+6=10
9+4=13
7+9=16
7+0=7 2 5 10 13 10 13 16 7 =87414052

உங்க நண்பர்களிடம் எத்தனை பெரிய எண்களையும் நொடியில் 11 ஆல் பெருக்கிக் காட்டி அசத்துங்க.இனி நீங்க பத்தோடு பதினொன்று இல்லை.சாமர்த்தியசாலின்னு நிரூபிங்க.
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

குட்டீஸ்!!!!
உங்க எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் பரிசா உங்களுக்கு ஒரு புதிர் கணக்குச் சொல்லித்தரப் போறேன்.

உங்க நண்பர்களின் பிறந்த நாளை சுலபமாக் கண்டுபிடிக்கிற கணக்கு!

முதல்ல உங்க நண்பரை

1. அவருடைய பிறந்த நாளின் மாதத்தை 4 ஆல் பெருக்கச் சொல்லுங்க

2.விடையுடன் 13 ஐக் கூட்டச் சொல்லுங்க.

3.அதை 25 ஆல் பெருக்கச் சொல்லவும்.

4.வரும் விடையிலிருந்து 200 கழிக்கவும்.

5.அத்துடன் பிறந்த தேதியின் எண்ணைக் கூட்டச் சொல்லவும்.

6.அதை 2ஆல் பெருக்கி

7.அதிலிருந்து 40 ஐக் கழிக்கவும்.

8.மறுபடியும் 50 ஆல் பெருக்கி

9.அத்துடன் அவர் பிறந்த வருஷத்தின் கடைசி 2 எண்களைக் கூட்டச் சொல்லவும்.

10.ஹாஹா இனிதான் உங்க மேஜிக் ஆரம்பம்…இதுவரை அவர் கூட்டிக் கழித்து பெருக்கி முடித்த தொகையை மட்டும் சொல்லச் சொல்லவும்.

அதை வைத்து ஒரு சின்ன மேஜிக் செய்தால் அவ்ர் பிறந்த மாதம்,தேதி,வருஷம் எல்லாம் சுலபமாகச் சொல்லி விடலாம்.

அந்த மேஜிக் செய்யவும் ஒரு நெம்பர் தேவை அது என்னன்னு அடுத்த பதிவில் சொல்றேன்.

டிஸ்கி:சும்மா டெஸ்டுக்காக குட்டீஸ்களோ அல்லலது அவர்களின் அண்ணாக்களோ 9வது படியில் வந்த தொகையை மட்டும் சொல்லுங்க .அவங்க பிறந்த நாள் சொல்றேன்.

டிஸ்கி 2:இவ்வளவு கணக்கு போடுவதற்கு பதில் நானே பிறந்த நாள் சொல்லிடுறேன் என்று நண்பர் சொன்னால் அவர் கணக்கில் மந்தம் னு அர்த்தம் ஹாஹாஹா…

குட்டீஸ்!!!

ஒரு சின்ன கணக்கு.

சந்திரமுகியில் வந்த வேட்டையபுரம் அரண்மணை மாதிரி ஒரு பெரிய மாளிகை.அந்தமாளிகையில் 100 மாடிப்படிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு படியிலும் படியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொம்மைகள் வைக்கப் படுகின்றன.

உதாரணமாக முதல் படியில் 1 பொம்மை… இரண்டாவதில் 2 பொம்மைகள்… மூன்றாவதில் மூன்று பொம்மைகள்……..50 வது படிக்கட்டில் 50 பொம்மைகள்………இப்படியாக 100 வது படியில் 100 பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கின்றன.

முதல் படியிலிருந்து 100 வது படிவரை வைக்கப் பட்டிருக்கும் மொத்த பொம்மைகளின் எண்ணிக்கை எத்தனை ன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்.

இதென்ன கடினமான வேலையா ன்னு பேப்பரும் பேனாவும் வைத்து கூட்டலை ஆரம்பிக்கக் கூடாது.

மனக் கணக்காக நொடியில் சொல்ல என்ன வழின்னு சொல்லனும்.சரியா?

லக…லக…லக…லக….ரெடியா?
*
*
*
விடை கீழே.ஆனாலும் பார்க்காமல் முயற்சி செய்யுங்கள்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
விடை : இரண்டு இரண்டு படிகளாக ஜோடி சேர்த்துக் கூட்டவும்.உதாரணமாக

1+99=100
2+98=100
3+97=100………
49+41=100 …..வரை கூட்டினால் மொத்தம் 4900 வரும்.
50 க்கும் 100 க்கும் ஜோடியில்லை
ஆகவே 4900+100+50=5050 பொம்மைகள்.

சூத்திரம்:n(n+1)/2

அன்புக் குழந்தைகளே

பெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு நன்கு தெரிந்திருக்கும்.
சின்னப் பிள்ளைகளுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் சிரமம் தானே?

இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!.நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!

செய்ய வேண்டியது:

1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.

2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.

3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.

4.பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.

என்ன குழம்புகிறதா?

உதாரணமாக 9×4=36

படத்தில் உள்ளது போல

உங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]
4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.
4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]

3…6..=36 தான் விடை

இன்னொரு கணக்கு 9×7=63 இந்த விடை எப்படி வந்தது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.

என்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா? இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே?


Advertisements