அரும்புகள்

Archive for the ‘கைவினைப் பொருள்’ Category

குட்டீஸ்!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

இந்த கைவினைப் பொருட்கள் பகுதியில் உங்களுக்கு ‘பயங்கரமான பேய் [ஆவி] பொம்மைகள் செய்யக் கத்துக் குடுக்கப் போறேன்.ஹ்ஹாஹ்ஹா…….

தேவையான பொருட்கள்:

பலூன்கள்
டிஷ்யூ பேப்பர் அல்லது வெள்ளை நிற கவரிங் பேப்பர்
நூல் கண்டு
மார்க்கர் பேனா அல்லது ஸ்கெட்ச் பேனா
ரப்பர் பேண்ட்

செய்முறை:
முதலில் பலூன் களை பெரிதாக ஊதி ரப்பர் பேண்ட் உதவியால் கட்டி வைக்கவும்.

பின்பு வெள்ளை ரேப்பர் பேப்பரை [கவரிங் பேப்பர்] விரித்து அதில் ஊதிப் பெரிதாக்கிய பலூனை வைத்து நன்கு மூடி [படத்தில் உள்ளது போல]மீண்டும் ரப்பர் பேண்ட் உதவியுடன் கட்டவும்.

மார்க்கர் அல்லது கலர் பேனாவினால் ஒவ்வொரு பேப்பர் சுற்றிய பலூன் மீதும் உருவங்களை வரையவும்.

நீண்ட நூலை எடுத்து பலூனுடன் கட்டப் பட்ட ரப்பர் பேண்ட் உடன் இணைத்துபறக்க விட்டால் பயங்கரமான பேய் பொம்மைகள் காற்றில் ஆடும்.

இரவில் அல்லது இருட்டு அறையில் தெரிய வேண்டுமானால் சாதாரண கலருக்கு பதில் ‘க்ளோ’ பெயிண்ட் அல்லது பேப்பர் ஒட்டி வெட்டினால் இருளிலும் உருவங்கள் தெரியும்.

குறிப்பு:உங்கள் நண்பர்கள் பிறந்த நாளான்று அல்லது முட்டாள்கள் தினத்தில் ஏமாற்றவோ மட்டுமே செய்து பார்க்கலாம்.
அடிக்கடி இப்படி செய்து பயம் காட்டக் கூடாது.சரியா?

Advertisements

குட்டீஸ்

இந்த கிறுஸ்துமஸ்க்கு நீங்களே அழகான அழகான சாண்டா
செய்து பார்க்கலாம் வாருங்கள்.

தேவைப் படும் பொருட்கள்:

முட்டை ஓடு
பவுண்டேஷன்[ஃபேஸ் கிரீம்]அல்லது ரோஸ் பவுடர்
பஞ்சு
சிவப்பு நிற வெல்வட் அல்லது வழவழப்பு பேப்பர்
கறுப்பு மற்றும் சிகப்பு ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டுக்கள்
சலோபன் நாடா
கம் அல்லது க்ளூ

முதலில் முட்டை ஓட்டில் மிகச் சிறிய துளையிட்டு அதில் உள்ள மஞ்சள்,,வெள்ளைக் கருவை வெளியில் கொட்டி விட்டு கழுவி காயவைக்கவும்.அதன் மீது பவுண்டேஷன் அல்லதுரோஸ் பவுடர் கொண்டு தேய்த்து பிங்க் நிறம் கொண்டடு வரவும்.


பிற்கு பஞ்சை நீளவாக்கில் கட் செய்து முட்டை ஓட்டின் கீழ்ப் பகுதியில் பசை தடவி மீசை போல் ஒட்டவும்.இரு சிறிய துண்டுகளை வெட்டி புருவம் போல் ஒட்டவும்.இரு பக்க வாட்டிலும் பஞ்சை ஒட்டவும்.

கறுப்பு பொட்டை இரு கண்களுக்குவ்வைத்து ஒட்டவும்.சிகப்பு நாடா அல்லது பேப்பரை கூம்பு வடிவில் செய்து தலையில் தொப்பி போல் வைத்து பசை அல்லது செல்லோ நாடா கொண்டு ஒட்டவும்.

அதில் ஒருதுண்டை மூக்காகவும் உதடாகவும் ஓட்டவும்.

மேலும் சிறிது பஞ்சை தாடி போல் ஒட்டித் தொங்க விடவும்.

தொப்பியில் இரு துளையிட்டு பக்கவாட்டிலிருந்து ஒரூகம்பியை பஞ்சு சுற்றி தொங்க விடவும்.


இதோ சாண்டா கிளாஸ் ரெடி

இனி என்ன கிறுஸ்துமஸ் மரத்தில் கட்ட வேண்டியதுதானே.

குட்டீஸ்!

கை விரலில் மை தடவி காகிதத்தில் வைப்பவர்களை
‘கை நாட்டு‘ன்னு தானே சொல்வாங்க.
ஆனா அக்கா சொல்ற மாதிரி செய்தால் ‘கலை வண்ணமாக’ மாறுவதோடு வரப் போகும்’கிறுஸ்துமஸ்”புத்தாண்டுக்கு’ நீங்களே அழகான வாழ்த்து அட்டை தயாரித்து உங்க நண்பர்களுக்கு கொடுக்கலாம்.அத்துடன் விடுமுறையும் பயனுள்ளதாக இருக்கும்.சரியா?

படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.

தேவையான பொருட்கள்:

பேப்பர் அல்லது சார்ட் அட்டை [வேண்டிய வண்ணத்தில்]
மை அட்டை[ink pad]
மார்க்கர் பேனா அல்லது கலர் ஸ்கெட்ச் பேனா[maker pen or color sketch pens]
பசை:[glue or gum]
ஜிகினாப் பொடி[glitter powder]
ஆர்வமும்,கற்பனா சக்தியும்

செய்முறை:
1.கை விரல்களை மை அட்டையில் வைத்து தேய்த்துப் பின் பேப்பரில் வைத்து கை நாட்டு போல் வைக்கவும்.

2.எது மாதிரி வரையப் போகிறோமோ அதற்குத் தகுந்தபடி நேராகவோ,வலது,இடது புறமாகவவோ விரல் அடையாளத்தைப் பதிய வேண்டும்.

இது ஓவியத்தின் தலைப் பகுதியாகவும் அல்லது உடலாகவும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

3.மை அடையாளம் [print] அளவுக்கு ஏற்ப எந்த விரலிலும் மை தடவிப் பயன் படுத்தலாம்.
4.சிறிது நேரம் மை அடையாளம் காய வேண்டும்.[குட்டீஸ் அதற்குள் கையை சோப் போட்டு கழுவிக் கொள்ளலாம்]

5.பின் கலர் அல்லது மார்க்கர் பேனாவால் படத்தின் கண்,காது ,வால் என தேவைப் படும் பகுதிகளை வரைய வேண்டும்.

6.விருப்பமானால் பசை தடவி படத்தைச் சுற்றி அழகிய ஜமிக்கி,மணிகள் ,செயற்கைக் கற்கள் ஒட்டலாம்.ஜிகீனாத் தூளும் [glitter powder] தூவலாம்.

7.இப்போது நீங்களே வரைந்த அழகான புதுமையான விரல் ரேகைப் படம் [finger print drawing]தயார்.

படம் வரைந்து சலிப்பாக இருக்கின்றதா?

வாருங்கள் ஒரு புது வகையான வரையும் முறையைக் கற்றுக்கொள்ளலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்

  • வர்ண காகிதங்கள்
  • தூரிகை/பென்சில்

முதலில் ஒரு வர்ண தாளை எடுத்து அதை 1 cm அகலத்திற்கு வெட்டி கொள்ளவும் .

தூரிகை எடுத்துக் கொள்ளுங்கள்.வெட்டிய தாளை அதன் பிடியில் இறுக்கமாக சுருட்டி கொள்ளவும்

முழுமையாக சுற்றி முடித்த பின் தூரிகையை வெளியே எடுத்து விடுங்கள்
இப்பொழுது உங்களுக்குப் படத்தில் காட்டப்படுள்ளது போல சுருள் தாள் கிடைக்கும்.


இதே மாதிரி பல வண்ணங்களிலும்,அகலங்களிலும் சுருள் தாட்களை தயாரிக்கலாம்

நீங்கள் நீண்ட காகிதங்களை உபயோகித்தால் இன்னும் நீண்ட சுருள்கள் கிடைக்கும்


இந்த படத்தில் உள்ள நீல தாள் பாதி அளவிற்கு மட்டுமே சுற்றப்பட்டுள்ளது.
இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு
இந்த மாதிரி நேர்தியான தாள்,இறுதியில் மட்டுமே சுருளுடன் கிடைக்கும்.இது ஒரு வகை சுருள்


அடுத்த முறை தாளின் இருப்பக்கமும் சுருள் இருக்கும்.இப்படி செய்ய அதன் இறுதியில் மட்டும் தூரிகையால் சுருட்ட வேண்டும்,பிறகு இதே மாதிரி அடுத்த இறுதியையும் சுருட்ட வேண்டும்

சரி இப்படி சுருட்டிய தாட்களை வைத்து என்ன செய்வது?படங்களைப் பாருங்கள்.இந்த மாதிரி சுருள்களை வைத்து அதை ஒட்டி இந்த மாதிரி புதுவகையான படங்களை நீங்களும் தயாரிக்கலாம். முயன்று பாருங்கள்.வாழ்த்துக்கள்

நன்றி:ART ATTACK


Advertisements