அரும்புகள்

Archive for the ‘பாதுகாப்பு’ Category

குட்டீஸ் ! கோடைகாலம் ஆரம்பிச்சுடுச்சு. நீங்களும் தேர்வுகள் எல்லாம் முடித்துவிட்டு சுட்டித்தனமா சுற்றுவீங்க இல்லையா? எப்பவும் அப்பா, அம்மா உங்களையே கவனித்துக் கொள்ளமுடியாது இல்லையா? இதோ நீங்களே பின்பற்ற உங்களுக்காக சில பாதுகாப்பு வழிமுறைகள்.

* அப்பா, அம்மா அலுவலகம் போயிருக்கும் போது நீங்கள் எங்கேயாவது வெளியே போகணும்னா தனியாக எங்கேயும் செல்லாதீர்கள். முதலிலேயே அப்பா, அம்மாவிடம் சொல்லி அவர்கள் சொல்லும் நபர்கள் கூட மட்டுமே வெளியே செல்லுங்கள். உதாரணமா மாமா, சித்தப்பா இப்படி தெரிந்தவர்கள் கூட மட்டும்தான் போகவேண்டும்.

* அப்பா, அம்மாவிடம் அனுமதி வாங்கிவிட்டு உங்கள் நண்பன் அல்லது தோழி கூட விளையாடுங்கள். வெளியே செல்லுங்கள்.

* வெளியே செல்லும் போது தெரியாத நபர்கள் தரும் பரிசுப்பொருட்கள், உணவுப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் எதுவும் வாங்கி சாப்பிடாதீர்கள்.

* அப்பா, அம்மா அலுவலகம் போயிருக்கும் போது வீட்டில் தனியே இருக்க நேர்ந்தால் எப்பவும் கதவைப் பூட்டியே வைத்திருங்கள். யாராவது வீட்டிற்கு வந்தால் கதவைத் திறக்காமல், ஜன்னல் அல்லது வியூ மிரர் மூலம் பார்த்து வந்திருப்பவர் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால் மட்டும் அவரிடம் பேசவும். இல்லையெனில் பயப்படாமல் உங்களுக்குத் தெரிந்த பக்கத்து வீட்டு அங்கிள், ஆன்ட்டியை சத்தம் போட்டுக் கூப்பிட்டு விசயத்தைச் சொல்லுங்கள்.

* எந்த ஒரு பொது இடத்துக்கும் ஷாப்பிங் மால், பார்க்கிற்கு எல்லாம் தனியே செல்லாதீர்கள். உங்கள் நண்பன் அல்லது தோழியுடன் அப்பா, அம்மாவின் அனுமதியுடன் செல்லுங்கள்.

* வெளியிடங்களுக்குச் செல்லும் போது நீங்கள் நண்பன், தோழியை தவறவிட்டு விட்டதாகத் தோன்றினால் பதட்டப்படாமல் நீங்கள் ஒரு பொதுவான இடத்தில் காத்திருங்கள். நீங்களாக அவர்களைத் தேடிச்செல்ல வேண்டாம்.

* முக்கியமாக எப்பவும் அப்பா, அம்மாவின் மொபைல் போன் எண்களை வாங்கி வைத்திருங்கள். நீங்கள் ஒரு தெரியாத இடத்துக்குச் சென்று விட்டதாக உணர்ந்தால் உடனே அருகில் இருக்கும் நம்பத்தகுந்தவர்களிடம் சொல்லி உங்கள் அப்பா, அம்மாவுக்குத் தொடர்பு கொண்டு விசயத்தைச் சொன்னால் அவர்களால் கண்டிப்பாக உங்களுக்கு உதவ முடியும்.

* முன்பின் தெரியாதவர்கள் உங்கள் பெயரைச் சொல்லி அழைத்தாலோ, ஏதும் பரிசுப் பொருட்கள் தந்தாலோ ‘உங்களை எனக்குத் தெரியாது’ என்று சொல்லி ஏற்க மறுத்துவிடுங்கள்.

* முன்பின் தெரியாதவர்கள் கார் அருகில் உங்களை அழைத்தாலோ, உங்களைக் காரினுள் ஏறச் சொன்னாலோ போகாதீர்கள்.

* உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் தோன்றினால் ‘உங்களை எனக்குத் தெரியாது’ ‘எனக்கு வேண்டாம்’ ‘நீங்கள் யார்?’ என்று தைரியமாக யாரிடமும் சொல்லுங்கள்.

தைரியம்தான் எல்லாருக்கும் முக்கியம் குட்டீஸ் ! கோடைகாலத்தை இனிமையாகக் கழிப்போம் சரியா? 🙂

Advertisements

Advertisements