அரும்புகள்

Archive for the ‘விளையாட்டு’ Category

குட்டீஸ்
பூக்களையும் பூந்தோட்டத்தையும் யாருக்காவது பிடிக்காமல் போகுமா?
உங்க பூந்தோட்டத்தை நீங்களே உருவாக்கலாம்.
கீழே உள்ள சுட்டியைக் கிளிக்கிப் பாருங்க.
பூந்தோட்டம்
என்ன திரை வெறுமையா இருக்கா?
உங்க எலிக்குட்டியை அங்கு இங்கும் நகர்த்தி சொடுக்குங்க.
எத்தனை அழகான பூந்தோட்டம் நீங்களே உருவாக்கியது பாருங்க.
மகிழ்ச்சிதானே

Advertisements

குட்டீஸ்!!!!!!

பாலின்ட்ரோம் [palindrome] என்பது முன் பின்னாக படிக்கும் போது ஒரே மாதிரி இருக்கும் சொல்லோ ,சொற்றொடரோ,எண்களோ ஆகும்.
உதாரணமாக

தமிழில்: விகடகவி
ஆங்கிலத்தில்: Madam I’m Adam
A man,a plan,a canal,Panama
Was it a cat I saw?

சரி இப்ப என்னுடைய கேள்வி :

ஒரு டிஜிட்டல் கடிகாரத்தில் மணி 8:08 என்றால் அடுத்த 62 நிமிடத்திற்குள் அந்த கடிகாரம் எத்தனை பாலின்ட்ரோம் எண்களைக் காட்டும்?
ஆரம்பிக்கும் எண்ணையும் கணக்கில் கொள்ளவும்.

குட்டீஸ்!!!!!!!!!!!

கீழே உள்ள ஒன்பதுக்கு ஒன்பது கட்டத்தில் ஒன்பது ஈக்கள் உள்ளது.
அவை ஒவ்வொன்றும் நேராகவோ, பக்க வாட்டிலோ, மேல்,கீழாகவோ, குறுக்கு வாட்டிலோ இரட்டை ஆகாமல் [ஒரே நேர்க்கோட்டில் வராமல்] தனித்தனியாய் இருப்பதைப் பாருங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது இதில் மூன்று ஈக்களை மட்டும் இடம் மாற்றி வைக்கனும்.

அப்படிச் செய்த பிறகும் எந்த இரண்டு ஈக்களும் நேராகவோ இட வலமாகவோ மேல்கீழாகவோ குறுக்காகவோ ஒரே நேர்க் கோட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் விதி.

என்ன சவாலுக்கு தயார் ஆகிவிட்டீர்களா ? முடிந்தவரை பெரியவங்க ஆலோசனை இல்லாம நீங்களே முயற்சி செய்யுங்க.

விடை அடுத்த பதிவில் சரி பார்த்துக் கொள்ளுங்க.

கட்டம் எண்ணைக் குறிப்பிட்டும் எங்கிருந்து எங்கு நகர்த்தலாம் என பின்னூட்டம் தரலாம்.

குறிப்பு:குட்டீஸ்கார்னர் என்ற புதிய வலைப் பூ உருவாகி இருப்பதால் குழப்பம் தவிர்க்க வேண்டி இன்று முதல் இந்த வலைப் பூ ‘குட்டீஸ்ஜங்ஷன்’ என்பது ‘அரும்புகள்” என்ற பெயரில் வரும்.

*
*

விடை கீழேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

வணக்கம் குட்டீஸ்!

இன்னும் கொஞ்ச நாள்ல கிறுஸ்துமஸ் விடுமுறை வருதில்லையா?

அப்ப பொழுது போகாம போரடிச்சி இருப்பீங்க.ஒரே விளையாட்டை எத்தனை முறைதான் விளையாடுவது.
அதனால அக்கா இங்கே ஒரு படம் போட்டிருக்கேன்.அது மேலே எலிக் குட்டிய [மவுஸ்]வைத்து சொடுக்கினா பெரிதாகும்.

அங்கே ‘ஸ்டார்ட்’ னு ஆரம்பிச்ச இடத்திலிருந்து ‘ஃபினிஷ்’ வரை உங்க எலிக்குட்டியை [மவுஸை ] நகர்த்திக் கிட்டு வாங்க.

ஒரே ஒரு சரியான பாதைதான் இருக்கு.தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தா நீங்க ஏப்ரல் முட்டாளாக மாறவும் வாய்ப்பிருக்கு.நிறைய தடைகளும் இருக்கு.

ஆனால் நீங்கதான் புத்திசாலிகளாச்சே நிச்சயம் வெற்றி பெறுவீங்க.

இந்த படத்தை பிரிண்ட் அவுட் எடுத்தும் பென்சிலின் உதவியோடு வழி கண்டு பிடிக்கலாம்.

முயலுங்கள் !வாழ்த்துக்கள்!!.

இது எல்லாம் நீங்க விளையாடி இருப்பீங்க இல்ல…நான் இதுல பட்டம் மட்டும் தான் விட்டிருக்கேன்….:-))
Advertisements